தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

ரயில் தடம்புரண்டதால் தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்த நோக்கி நேற்று பயணம் மேற்கொண்டிருந்த ரயிலொன்று தடம்புரண்டதால் வடக்கு ரயில் மார்க்கத்திலான சேவைகள் நேற்று மாலை முதல் தடைப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த ரயில் அனுராதபுரம், சாலியபுர பகுதியில் வைத்து தடம்புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், தடம்புரண்டிருந்த ரயில் பெட்டி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாகவும் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

இதற்கமைய வடக்கு ரயில் மார்க்கம் ஊடான சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன.LEAVE A COMMENT