கடின மற்றும் இலகு உணவு வகைகளுக்கான வர்ணக் குறியீட்டு முறை ஜூன் முதல் அமுல்

கடின மற்றும் இலகு உணவு வகைகளுக்கான வர்ணக் குறியீட்டு முறை ஜூன் முதல் அமுல்

கடின மற்றும் இலகு உணவு வகைகளுக்கான வர்ணக் குறியீட்டு முறை ஜூன் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வௌியிடவுள்ளதுடன், அதற்கான ஆவணத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கையெழுத்திட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உணவுகளுக்கான வர்ணக் குறியீட்டு முறை கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும், சட்ட அமுலாக்கல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதால், குறிப்பிட்ட திகதியில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிஸ்கட் மற்றும் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பாளர்கள் சங்கங்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மென்பானங்களுக்காக வர்ணக் குறியீட்டு முறை ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A COMMENT