கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் மேலும் 23 விமானங்கள் தரித்து நிற்கும் வகையிலான கட்டட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதற்காக 6 பில்லியன் ரூபா செலவில்   இரண்டு இலட்சம் சதுர அடியில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன் மூலம் விமான நிலையத்தில் காணப்படும் நெரிசலான நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்  என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிர்மாணப் பணிகள் விமான நிலைய முனையத்தின் பயணிகள் வருகை  தரும் இடத்திற்கு அருகேலேயே முன்னெடுக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரியொருவர் கூறுகின்றார்.LEAVE A COMMENT