சூடானின் கடந்த  அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கைது

சூடானின் கடந்த அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கைது

சூடானின் கடந்த  அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை இடைக்கால இராணுவச் சபை அதிரடியாக கைதுசெய்துள்ளது.

அத்துடன், சூடானில் விரைவாக மக்கள் மயப்படுத்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கோரி வருகின்றனர்.

இந்தநிலையில், மக்களின் போராட்டத்தை கலைக்க மாட்டோம் என்றும் மக்கள் தெரிவுசெய்யும் புதிய பிரதமரை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் கடந்த 30 வருடங்களாக நீடித்த ஒமர் அல் பஷீரின் ஆட்சியை கடந்த வாரம் கவிழ்த்த இராணுவம், தற்போது இடைக்கால இராணுவ சபையொன்றை அமைத்துள்ளது.

ஒமரின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை கொண்டவர்கள் இராணுவ சபையில் உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இராணுவச் சபையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

அத்துடன், அரசாங்கத்தின் முன்னாள் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், முழுமையாக மக்கள்  ஆட்சியை உறுதிப்படுத்தும்வரை தாம்  வீதிகளை விட்டு விலகமாட்டோம் என மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

 LEAVE A COMMENT