CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

sofa உடன்படிக்கையானது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு மீறும் நடவடிக்கை - UPFA

sofa உடன்படிக்கையானது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு மீறும் நடவடிக்கை - UPFA

அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளவுள்ள  sofa உடன்படிக்கையானது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு மீறும் நடவடிக்கை ஐக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே  கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர  இதனை கூறியுள்ளார். 

அமெரிக்க இராணுவத்தை நாட்டிற்கு வரவழைப்பதற்கான  நடவடிக்கைகளை  அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதற்கான சகல நடவடிக்கைகளும்  தற்போமு   பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தி எதிர்கால தலைமுறையினரை அமெரிக்காவிற்கு அடிபணிய வைக்கும் ஒப்பந்தங்களை எதிர்க்கும்  அனைத்து தரப்பினருக்ககும் அரசியல் பேதங்களை துறந்து முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

நாட்டின் இறையான்மையினை விட்டுக் கொடுக்கும் ஒப்பந்தங்களை  செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். 




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்