CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இரண்டு சடலங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்ட லயன் எயார் விமானம்

இரண்டு சடலங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்ட லயன் எயார் விமானம்

சவுதி அரேபியாவில் இருந்து  287 பயணிகளுடன் இந்தோனேஷியா நோக்கி பயணித்த லயன் எயார் விமானம்  ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டுள்ளது.

குறித்த  லயன் எயார் விமானம் இன்று அதிகாலை இவ்வாறு தரையிரக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்

இன்று அதிகாலை குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலைய வான்பரப்பில் பயணித்தவேளை பயணிகள் இருவர் சுகவீனமுற்றுள்ளதாகவும்

இதன் காரணமாக விமானம் தரையிரங்குவதற்கு அனுமதிவழங்குமாறு   தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விமானம் இன்று அதிகாலை  2.45 அளவில் தரையிரங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த விமானத்தில் சுகவீனமுற்றுள்ளதாக கூறப்பட்ட பயணிகள் இருவரும் விமான நிலைய  வைத்தியர்களினால் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது பயணிகள் உயிரிழந்துள்ளமை  கண்டறியப்பட்டுள்ளது.

இந்தோனேஷிய பிரஜைகள் இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் சடலம் இன்று முற்பகல் 7. 40 அளவில் விமானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு  பிரேத பரிசோதனைகளுக்காக  நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த லயன்எயார் விமானம்  தேவையான எரிபொருட்களை பெற்று முற்பகல் 8.13 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தோனேஷியா நோக்கி தமது பயணத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்