CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

உறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்

உறுதியானது - இலங்கையில் கொரொனா வைரஸ்

இலங்கையில் கொரொனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இலங்கையில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சீனப் பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சீனாவின் ஹுபைய் மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 43 வயதையுடைய பெண்ணொருவரே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


இதற்கமைய, குறித்த பெண் தற்போது அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன், குறித்த பெண் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டள்ளார் என்பதை சுகாதார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது


இதேவேளை, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரையில்,81 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டாயித்து 744 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும்,461 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தாய்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் , கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்