CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வடக்கில் வீடமைப்புத் திட்டங்கள் - ஆரம்பித்து வைக்கின்றார் ஆறுமுகம் தொண்டமான்

வடக்கில் வீடமைப்புத் திட்டங்கள் - ஆரம்பித்து வைக்கின்றார் ஆறுமுகம் தொண்டமான்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகஅமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் இடம்பெறவுள்ள இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார்.

அவருடன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானஅங்கஜன் இராமநாதனும் அந்த நிகழ்வில் விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ், புதிய தொழில்நுட்பத்தில் 28,000 கொங்கிரீட் நிரந்தர வீடுகள் மற்றும் பயனாளிகளால்அமைக்கப்படும் நிரந்தர வீடுகள் ஆகியன உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

புதிய தொழில்நுட்பத்திலான வீட்டுத் திட்டத்தில் கொன்கிறீட் தகடுகளைக் கொண்டுநவீன முறையில் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளது.

மேலும், பயனாளிகளால் அமைக்கப்படும் நிரந்தர வீடுகள் திட்டத்தின் கீழ், வடக்குமாகாணத்தில் 550 பயனாளிகளுக்கு அவர்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைக்கும் திட்டம்நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் 10 லட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.இந்த இரண்டு வீட்டுத் திட்டங்களையும் நாளைய தினம் மூக வலுவூட்டல் மற்றும் தோட்டஉட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்