CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்தியவர் கைது - ஒரு இலட்சம் ரூபா அபராதம்

சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்தியவர் கைது - ஒரு இலட்சம் ரூபா அபராதம்

டுபாயில் இருந்து சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்தி வந்த, மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேக நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ.எல். 226 எனும் இலக்க விமானத்தில் இன்று அதிகாலை 4.55க்கு டுபாயில் இருந்து இலங்கை வந்த அவர், விமான நிலைய வருகைப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரிடம் இருந்து, இரண்டு வகையைச் சேர்ந்த, 114 பெட்டிகளில் அடைக்கப்பட்ட, 11 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பெறுமதியான 22 ஆயிரத்து 760 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்