CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

 இந்தியா - நியூஸிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: நியூஸிலாந்து முன்னிலை

இந்தியா - நியூஸிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: நியூஸிலாந்து முன்னிலை

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. 

நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியானது மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 39 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில்  நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் முதலாவது நாளில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,  55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. 

2 ஆவது நாளான நேற்றைய தினம் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  முதல் இன்னிங்ஸில்  165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி  சகல விக்கெட்டுக்களையும் இழந்து 348 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இதன் பின்னர்  2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, இன்றை ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்