CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மலேசிய நாடாளுமுன்ற உறுப்பினர் விடுதலை - சட்டமா அதிபரை கைது செய்ய வலியுறுத்தல்

மலேசிய நாடாளுமுன்ற உறுப்பினர் விடுதலை - சட்டமா அதிபரை கைது செய்ய வலியுறுத்தல்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவளித்து குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த செரம்பன் ஜெயாவை மலேஷிய மேல்நீதிமன்றம் விடுவித்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில்  இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறுமாறு சட்டமா அதிபர் டொமி தோமஸ் பிரதி அரச தரப்பு சட்டத்தரணிக்கு விடுத்த அறிவுறுத்தலை கருத்திற் கொண்ட நீதவான் அவரை விடுவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முகநூல் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்க மற்றுமொரு நீதவான் முன் முன்னிலைப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு்ளள 11 பேரை விடுவிக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

தமது நாட்டு அரசியலமைப்பின் 145இன் கீழ் 03 ஆவது பிரிவின் பிரகாரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர்களின் விடுதலை குறித்து நடவடிக்கையெடுக்கவுள்ளதாக மலேஷிய சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

அத்துடன் அந்த 11 பேரும் இந்தவாரத்திற்கு விடுவிக்கப்படலாம் என மலேஷிய ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் கைதுசெ்யயப்பட்டுள்ள வாகன சாரதியான வீ பாலமுருகன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தமிழீழ விடுததலைப்புலிகளுக்கு ஆதரவான பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்காப்பட்டு்ளளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் சட்டரீதியாக சவால் விடுக்கவுள்ளதாக அவரது சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.

எனவே பாலமுருகனின் சட்ட மீளாய்வு மனுவினை எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை சட்டமா அதிபர் டொம்மி தொம்சனை பதவி நீக்குமாறு மலேஷியாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரை பதவி நீக்காவிடில' பாரிய  போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த குற்ற்சசாட்டில் யாரையும் கைது செய்வதற்கான யதார்த்தபூர்வமான காரணங்கள்  இல்லையென சட்டமா அதிபர் தெரிவித்தமை இந்த எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்