CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஐ.நா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமைக்கு கனடா-பிரித்தானியா அதிருப்தி

ஐ.நா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமைக்கு கனடா-பிரித்தானியா அதிருப்தி

தாம் இணை அனுசரணைவழங்கும் தீர்மானங்களில் இருந்து  இலங்கை விலகுவதற்கு மேற்கொண்ட தீர்மானம் குறித்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகியன கவலைதெரிவித்துள்ளன.

இலங்கை தாம் இணை அனுசரணைவழங்கிய தீர்மானங்களில் இருந்து விலகியமை தொடர்பில் ஏமாற்றமடைந்துள்ளதாக பொதுநலவாய அலுவலம் மற்றும் வௌியுறவுத்துறைக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமைகள்,நல்லிணக்கம்,நீதி மற்றும் பொறுப்புக்கூறலைபேண இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் கனடாவும் இலங்கையின் தீர்மானம் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளது,

எவ்வாறாயினும் தமது பொறுப்புக்கூறலை முன்னெடுக்ககூடியசெயற்பாடுகளை  இலங்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமது நாடு பூரணஒத்துழைப்பை வழங்கும் எனவும் கனேடிய வௌியுறவுத்துறை அமைச்சர் பிரன்சிஸ் பிலிப் தெரிவித்துள்ளார்,

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும்30 கீழ் 01 ,34 கீழ் 01 மற்றும் 40 இன் கீழ்  01 ஆகியதீர்மானங்களில் இருந்து இலங்கை விலகும் எனவும் கனேடிய வௌியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்,

ஆனால் இலங்கை உள்ளகப் பொறிமுறையொன்றினை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்