CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இலங்கையர்கள் 2பேர் வௌியேற்றம்-பிரதமர் நன்றி தெரிவிப்பு

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இலங்கையர்கள் 2பேர் வௌியேற்றம்-பிரதமர் நன்றி தெரிவிப்பு

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவரை வௌியேற்ற உதவி புரிந்தமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை இன்று பதிவிட்டுள்ளார். 

கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தில் ஜப்பான் கடற் பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 119 இந்தியப் பிரஜைகளுடன், 2 இலங்கையர்களும் இந்திய அரசாங்கத்தினால் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 

இலங்கை அரசாங்கத்தின் விசேட வேண்டுகோளின் பேரில் குறித்த இலங்கையர்கள் இருவரும் இந்திய அரசாங்கத்தினால் அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், இந்திய பிரதமர், இந்திய அரசாங்கம் மற்றும் எயார் இந்தியா ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விசேட நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்