CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சுத்தப்படுத்த இன்று முதல் நடவடிக்கை (Video)

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சுத்தப்படுத்த இன்று முதல் நடவடிக்கை (Video)

நாட்டில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளையும் இன்றுமுதல் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கான உபகரணங்கள்,  இலங்கை போக்குவரத்து சபையின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், சுத்தப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு அரச பேருந்து நிலையத்துக்கும் 24 மணிநேரமும் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும்  இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்து நிலையங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை போக்குவரத்து அதிகாரசபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்