CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம் : முழுமையான தகவல் உள்ளே

நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம் : முழுமையான தகவல் உள்ளே

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

அத்துடன், குறித்த மாவட்டங்களில் 24 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அன்றைய தினம் மாலை 2 மணி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. 

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டமானது 23 ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்ட்டு, அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மறுநாள் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது..  

இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், விவசாயிகள் தமது நடவடிக்கைகளை இடையூறு இன்றி முன்னெடுக்க பொலிஸார் அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவறுத்தியுள்ளார். 

அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் அது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களை இடையூறு இன்றி கொண்டு செல்ல பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்