CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு -  அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி

தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரிப்பு - அங்கஜனின் முயற்சிக்கு வெற்றி

யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்ற நிலையில் தென்மராட்சி பிரதேச செயலகம் அதிக பரப்பளவினையும் அதிகமான கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இதனை இரண்டாக பிரிப்பதற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காலத்தில் இடம்பெற்றிருந்த பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.

இந்நிலையில், அங்கஜன் இராமநாதனினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை,  தென்மராட்சி பிரதேச செயலகத்தினை கொடிகாமம் பிரதேச செயலகமாகவும் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகமாகவும் இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கை அங்கஜன் இராமநாதனினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தென்மராட்சி பிரதேச செயலக விவகாரம் தொடர்பில், கடந்த 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி அங்கஜன் இராமநாதனினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான கடிதம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய பிரதேச செயலகத்துக்கான ஆரம்பப் பணிகள் மற்றும் ஆளணிகள் குறித்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த வருட நடுப்பகுதியில் புதிய பிரதேச செயலகம் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்