CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

யாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது

யாழில் சர்ச்சை ஏற்படுத்திய கொரோனா அச்சுறுத்தல் : புதிய தகவல் சற்று முன்னர் வெளியானது

சுவிட்ஸர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்த கிறிஸ்தவ மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதிலும், பின்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையிலேயே, குறித்த விடயத்தை உறுதி செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் குறித்த மதப் போதகருக்கு நோய்த் தொற்றுள்ளமை குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுவிட்ஸர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்த குறித்த கிறிஸ்தவ மதபோதகர்,  யாழ்ப்பாணத்தில் ஆராதனை ஒன்றினை நடத்தியிருந்தமை கண்டறியப்பட்டது. 

ஆராதனையைத் தொடர்ந்து அவர் மீண்டும் அன்றைய தினமே, சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த ஆராதனை நிகழ்வில், அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மருத்து சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு, கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆராதனையில் பங்கேற்றவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும், வைத்தியசாலையில் அவர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், பதிவுகளை முன்னெடுக்கும் வகையில் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0212217278 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்