CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வடக்கிற்கு ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது ...!

வடக்கிற்கு ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது ...!

வடமாகாணத்துக்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களுக்குமான  ஊரடங்கு சட்டத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலே, இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது மீண்டும் அன்றைய தினம் பகல் 2 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.  

வடமாகாணத்தின் மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைதீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு, வெளிபயணங்கள் மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளோனோர் என்ற சந்தேகத்தில் 17 பேர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வடக்கு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். 


முதலாம் இணைப்பு...

சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கிறிஸ்தவ மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய போதிலும், பின்னர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த விடயத்தை உறுதி செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சியில் குறித்த மதப் போதகருக்கு நோய்த் தொற்றுள்ளமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குறித்த கிறிஸ்தவ மதபோதகர்,  யாழ்ப்பாணத்தில் ஆராதனை ஒன்றினை நடத்தியிருந்தமை கண்டறியப்பட்டது.

ஆராதனையை தொடர்ந்து அவர் மீண்டும் அன்றைய தினமே, சுவிட்சர்லாந்துக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

இந்த ஆராதனை நிகழ்வில், அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு, கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, குறித்த சுவிஸ் மத போதகருடன் 30 நிமிடம் குறித்த நபர் தனியாக உரையாடியுள்ளார்.

அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுவதுடன், கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டி. சத்தியமூர்த்தி எமது கெப்பிட்டல் நியூசுக்கு தெரிவித்தார்.

அவரை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, குறித்த ஆராதனையில் பங்கேற்றவர்களை உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும், வைத்தியசாலையில் அவர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பதிவுகளை முன்னெடுக்கும் வகையில் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

0212217278 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்