CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஊரடங்கு சட்டம் நீடிப்பு - விசேட நிவாரணங்களை வழங்க அங்கஜன் கோரிக்கை

ஊரடங்கு சட்டம் நீடிப்பு - விசேட நிவாரணங்களை வழங்க அங்கஜன் கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை  தொடர்ந்தும் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். 

இதற்கமைய, ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு செயலணியின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழ்கின்ற தினக்கூலி ஊழியர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு விசேட நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க யோசனை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம்  மாவட்டத்தின்  தற்போதைய நிலைமைகள் குறித்து கெப்பிட்டல் செய்திக்கு கருத்துரைக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும்,  யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வறுமைக்கோட்டுக்குள் வாழும் குடும்பங்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களின் குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். 

இதற்கமைய 64 ஆயிரத்து 278 குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு அந்தக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த விசேட நிவாரணம் வழங்கும் திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள தினக்கூலி ஊழியர்கள், கட்டுமான பணியாளர்கள், பனை உற்பத்திசார் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களும் உள்ளடக்கப்பட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறுப்பிட்டார். 

மேலும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்