CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு  பொதுமக்களின் ஒத்துழைப்பு  மிகவும் அவசியம் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில்  யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிபிள்ளை மகேசன் இதனை தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைமை தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஒன்றுக்கூடலானது கிளிநொச்சி கராச்சி மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஊரடங்கு சட்டம் உள்ளபோதும், மக்களுக்கு எவ்வாறு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்கள் திடீரென வர்த்தக நிலையங்களில்,  பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை கொள்வனவு செய்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


இதேவேளை,  மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்று ஏற்ப்பட்டிருக்காலம் என்ற சந்தேகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த 6 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த 6 பேரையும் சமூகமயப்படுத்த இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மஸ்கெலியா பொது சுகாதர வைத்திய அதிகாரி டி.சந்திரராஜன் தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக. குறித்த 6 பேரும் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதற்கான சான்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மக்களை தனிடைப்படுத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்தியர் எஸ். மதனழகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவியுமாகிய கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே,  வைத்தியர் எஸ். மதனழகன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்