CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

16 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு

16 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.  

கொழும்பு, களுத்துறை, கம்பஹா  ஆகிய  மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய  மாவட்டங்கள் கொரோனா அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, வட மேல் மாகாணத்தின்  புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் நாளை  காலை 6 மணிக்கு  நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

அத்தோடு நாளை  காலை 6 மணிக்கு  நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம்  நண்பகல் 12 மணிக்கு மீண்டும்  அமுல்படுத்தப்படவுள்ளது. 

மேலும், ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு கட்டாயத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் விவசாயம், சிறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் ஏற்றுமதி உற்பத்தி துறைகளில் பணிபுரிபவர்கள் தொடர்ந்தும் பணிபுரிவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், ஊடகங்கள் தங்கள் சேவைகளைத் தொடரவும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டு செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  விமான நிலையங்களின் சேவைகள் மற்றும் துறைமுகங்களின் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாடு முழுவதும்  பயணிப்பதற்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்