CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

அத்தியாவசியப் பொருட்கள் உங்கள் வீட்டுக்கே விநியோகம் - முழு விபரம் உள்ளே...!

அத்தியாவசியப் பொருட்கள் உங்கள் வீட்டுக்கே விநியோகம் - முழு விபரம் உள்ளே...!

நாட்டில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது,

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமமையில் இதற்கான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று  மாலை  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வங்கிப் பிரதானிகள், அரச மற்றும் தனியார் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

இதன் போது நாட்டு மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன,

கூட்டுறவுச் சங்கங்ககள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக அரிசி, தேங்காய், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை தடையின்றி மக்களுக்கு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை பிரதேச ரீதியாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,

இதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்பட்டு மருந்துப் பொருட்களை பெறுவொருக்கு அவர்களின் மருந்துச் சீட்டுக்களுக்கு அமைய வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் பொறிமுறையொன்று பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது,

அத்துடன் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வோருக்கு அவரவர் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தகங்கள் ஊடாக மருந்துகளை விநியோகிக்கும் நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது,

மேலும் வர்த்தகம் மற்றும் அத்தியவசிய செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் வணிக வங்கிகளை திறந்து வைக்குமாறு அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, வீட்டிலிருந்தவாறு தொலைபேசி மூலம் சமையல் எரிவாயுக்களை பெற்றுக்  கொள்வதற்கான வேலைத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறுகின்றார்,

மேலும் பயிர்ச் செய்கைகள் மற்றும் கடற்றொழில் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் வழங்கவுள்ளது,

அத்துடன் மரக்கறி வகைகளுடன் தானிய வகைகளையும் உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்குமாறு அரசாங்கம் அதிகாரிகளை பணித்துள்ளது, 

இதேவேளை,  வாடிக்கையாளர்களுக்கு  அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும்  நடவடிக்கை  இன்று முதல் கம்பஹா மற்றும்  களுத்துறை ஆகிய மாவட்டங்களில்  செயற்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டமானது  இன்று முதல் கம்பஹா மற்றும்  களுத்துறை ஆகிய மாவட்டங்களில்  செயற்படுத்தப்பட உள்ளதாக  சதோச   மொத்த விற்பனை நிலையத்தின்  தலைமை அதிகாரி  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  1331  எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன்  மூலம் குறித்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும்  அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நன்மை கருதி அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான  கருத்துக்கள்  பதிவேற்றப்படுவதாகவும் இதன் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்