அயர்லாந்து அணியினை தடுமாற வைத்த தமிழ் பேசும் இலங்கை வீரர்.

அயர்லாந்து அணியினை தடுமாற வைத்த தமிழ் பேசும் இலங்கை வீரர்.

அயர்லாந்து "ஏ" கிரிக்கெட் அணியினருக்கு எதிரான உத்தியோகப்பற்றற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை "ஏ" கிரிக்கெட் அணியினர் 203ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அயர்லாந்து "ஏ" கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று ஆரம்பமானது.

நேற்றைய முதலாவது நாள் ஆட்ட நேரமுடிவில் தமது முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய இலங்கை  அணியினர்  4 விக்கட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது Milinda Siriwardana 74 ஓட்டங்களையும் Kamindu Mendis 64 ஓட்டங்களையும் பெற்று களத்திலுள்ளனர்.

நேற்று ஆரம்பமான போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து "ஏ" கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதனடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சிற்காக  துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணியின் James McCollum அதிகப்பட்சமாக 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Mohamed Shiraz மற்றும் Lasith Embuldeniya ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் Nishan Peiris 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.


LEAVE A COMMENT