மனிதாபிமான உதவி பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதாக  ஜுவான் கெய்டோ வாக்குறுதி!

மனிதாபிமான உதவி பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதாக ஜுவான் கெய்டோ வாக்குறுதி!

மனிதாபிமான உதவி பொருட்களை நாட்டிற்குள் தாம் கொண்டு வருவதாக  வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ, வாக்குறுதியளித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான உதவி பொருட்களை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ தன்னார்வ தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கான திட்டத்தினை தாம் அடுத்து வாரத்திற்குள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மனிதாபிமான  உதவிபொ ருட்கள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் சிலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுவேலாவிற்கு சர்வதேசத்தின் உதவி தேவையில்லை என தெரிவித்து, அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கொலம்பிய எல்லை பகுதியை மூடியுள்ளார்.

இதனால் அங்குள்ள மக்கள் உணவு , நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கொலம்பியாவின் குகடா எல்லைப் பகுதியில், உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நிக்கலஸ் மதுரோவின் கொள்கையினால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டமையால் அங்கு அரசியல் குழப்பம் தொடர்ந்தும் நீடித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
 


LEAVE A COMMENT