மாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள்- விசாரணைகள் நிறைவடைந்துள்ளது!

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள்- விசாரணைகள் நிறைவடைந்துள்ளது!

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி போதிலும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறித்து எந்த வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

 

கைது செய்யப்பட்ட சில சந்தேகநபர்கள் கொக்கேன் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை, உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சந்தேகநபர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாவதற்காக பல சட்டத்தரணிகள் இலங்கையிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

எனினும், அந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம், குறித்த சட்டத்தரணிகள் வாதிடுவதில் பிரச்சினைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


LEAVE A COMMENT