அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மாநில செனட்டர் அறிவித்துள்ளார்!
- By Capital News -
- 11 Feb 2019 -
- 57 Views
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக அந்த நாட்டு மினசோட்டா (Minnesota) மாநில செனட்டர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிலர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மினசோட்டா (Minnesota) மாநில செனட்டர் ஆமி குளோபுச்சார் (Amy Klobuchar) இன்று அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஐந்தாவது பெண் இவரென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செனட்டர் ஆமி குளோபுச்சார் (Amy Klobuchar) அமெரிக்காவில் சட்டதரணியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.