மொனராகலை  துப்பாக்கிப் பிரயோகம்  தொடர்பிலான விசாரணை ஆரம்பம்!

மொனராகலை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசாரணை ஆரம்பம்!

மொனராகலை - தனமல்வில பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்காக, மூன்று காவல்துறைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்ட பகுதியில் பெறப்பட்ட சீ.சீ.டி.வி. காணொளிகளை ஆதாரமாக கொண்டே, விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  

தனமல்வில பகுதியில் நேற்றுப் பிற்பகல் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், 42 வயதான  நபரொருவர் உயிரிழந்துள்ளதோடு, 22 வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார்.  

இந்த துப்பாக்கிப் பிரயோகம், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நான்கு சந்தேகநபர்களால் நடாத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.   

மேலும், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் ,கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  காவல்துறையினரால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.      


LEAVE A COMMENT