மன்னார் சவுத்பார் பகுதியில்  ஜெலிக்நைட்  குச்சிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மன்னார் சவுத்பார் பகுதியில் ஜெலிக்நைட் குச்சிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மன்னார் - சவுத்பார் பகுதியில் வெடிபொருட்களை தயாரிக்கப்பயன்படுத்தும் ஜெலிக்நைட் (gelignite) குச்சிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரும், மன்னார் காவல்துறையினரும் இணைந்து நடாத்திய தேடுதலின் போது,  இந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதன்போது, மூன்று கிலோகிராம் நிறையுடைய 30  ஜெலிக்நைட் குச்சிகளும், இலத்திரனியலற்ற 19 டெனனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில், மன்னார் பகுதியைச் சேர்ந்த 36 வயதையுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தம்சவசம் வைத்திருந்த ஜெலிக்நைட் குச்சிகள் மற்றும் வெடி பொருட்களை மன்னார் காவல்துறையில் ஒப்படைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறை முன்னெடுத்து வருவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


LEAVE A COMMENT