எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருட்களின் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.


எரிபொருட்களின் விலைகளை தீர்மானிப்பதற்காக மாதாந்தம் 10 ஆம் திகதியன்று முன்னெடுக்கப்படும் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 6 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவினாலும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிடுகின்றது.

இதன் பிரகாரம் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 129 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 152 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் 103 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 126 ரூபாவாகவும் விலை மீள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A COMMENT