90ml திரைவிமர்சனம் - நம்ம ஓவியாவா இப்படி?

90ml திரைவிமர்சனம் - நம்ம ஓவியாவா இப்படி?

படத்தை பற்றிய அலசல்:


ஓவியா - அவரா இப்படி? என நம்மை யோசிக்கவைக்கும் அளவுக்கு படம் துவங்கியது முதல் கிளிமாக்ஸ் காட்சி வரை நம்மை அதிர்ச்சியிலேயே வைத்திருக்கிறார். அவருக்கு தோழிகளாக நடித்த பெண்கள் தங்கள் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.

குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மற்ற படங்களில் டைட்டில் கார்டில் வரும், படத்தின் இடையில் ஏதோ ஒரு இடத்தில் அதிகபட்சம் இருக்கும். ஆனால் 90ml படம் பெயருக்கு தகுந்தாற்போல குடிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் முழுவதும் அந்த வாசகம் தான் இடம் பெற்றுள்ளது.

மேலும் கவர்ச்சிக்கு படம் முழுவதும் பஞ்சம் இல்லை. அரைகுறை ஆடைகள் தான் படம் முழுவதும். நல்ல வேலை கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் விஷயங்களை திரையில் காட்டுவதில் மட்டும் அளவோடு நிறுத்தியுள்ளார் இயக்குனர் அனிதா உதீப்.


க்ளாப்ஸ்:


- லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல், கட்டாய அரெஞ் மேரேஜால் வரும் பிரச்சனை உட்பட பல விஷயங்களை தைரியமாக திரையில் காட்டியது.

- இடைவேளை ஷாட்டில் வரும் ட்விஸ்ட்.


பல்ப்ஸ்:


- குறிக்கோளே இல்லாமல் ஓடும் கதை.

- பெண்களும் சுதந்திரமாக தைரியமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என காட்டியிருந்தாலும், அதற்காக குடிப்பது-கஞ்சா அடிப்பது போன்ற விஷயங்களை நியாயப்படுத்தி காட்டியிருப்பது.

- சிம்புவின் பின்னணி மியூசிக் ஓரளவுக்கு தான் எடுபடுகிறது. இருப்பினும் படத்தின் கிளைமாக்ஸில் அவர் வரும் சில நிமிட காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

மொத்தத்தில், 90ml ஒரு அமெரிக்க வெப் சீரிஸ் பார்த்த பீல். இந்திய கலாச்சாரத்திற்கு பொருந்துமா?


LEAVE A COMMENT