திருக்கேதீஸ்வரம் அலங்கார வளைவு தொடர்பிலான அமைதியின்மை - வெளியாகியுள்ள முக்கிய தகவல்

திருக்கேதீஸ்வரம் அலங்கார வளைவு தொடர்பிலான அமைதியின்மை - வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சிவராத்திரியை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையூறும் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ளுமாறு மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் நேற்றைய தினம் திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் அலங்கார வளைவு தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து இன்று வெளியிட்ட தெளிவூட்டல் அறிக்கையிலேயே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

கத்தோலிக்கத் திருச்சபை அமைதிவழித் தீர்வையே விரும்பி வருவதாகவும் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள் LEAVE A COMMENT