நாட்டில் போதைப்பொருளுக்கு பெண்களும் அடிமையாகியுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருளுக்கு பெண்களும் அடிமையாகியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேகநபர்கள் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களின் ஊடாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. 

அநுராதபுரம், கிரான்பாஸ், அங்குலானை ஆகிய பகுதிகளிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் ஊடாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 6  தசம் 297 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கொழும்பு - கிரான்பாஸ் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பொன்றில் ஒரு தொகை ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 04 தசம் 270 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


LEAVE A COMMENT