இந்திய விமானப்படையின் மற்றுமொரு போர் விமானம் இன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இந்திய விமானப்படையின் மற்றுமொரு போர் விமானம் இன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இந்திய விமானப்படையின் மற்றுமொரு போர் விமானம் இன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

 

அண்மையில், இந்திய விமானப்படையின் விமானி விங் கொமாண்டர் அபிநந்தனால் செலுத்தப்பட்டு, பாகிஸ்தானிய பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மிக் 21 ரக விமானத்தை ஒத்த வகையை சேர்ந்த விமானமே இன்றைய தினம் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விமானத்தைச் செலுத்திய விமானி, அது வீழ்ந்து நொறுங்கும் முன்னர் அதிலிருந்து வெளியேறியமை காரணமாக உயிர் பிழைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தப் போர் விமானம், இந்திய எல்லைக்குள்ளாக ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் பகுதியிலேயே விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

தொழினுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய அரச தரப்பு தெரிவித்துள்ளது.

 

இந்திய விமானப்படையில் நவீன வசதிகள் அற்ற பழைய விமானங்களைச் செலுத்துவதற்கே, விமானிகள் வற்புறுத்தப்படுவதாக அண்மையில், இந்திய மத்திய அரசாங்கத்தின் எதிர்த்தரப்புகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.


LEAVE A COMMENT