சமீமா பேகத்தின் குழந்தை உயிரிழப்பு

சமீமா பேகத்தின் குழந்தை உயிரிழப்பு

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்காக லண்டனிலிருந்து வெளியேறி சிறியாவுக்கு வருகை தந்த சமீமா பேகம் என்ற  பெண்ணின் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிரியாவின் குடியரசுப் படையின் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

பிறந்து மூன்று வாரங்களே ஆன சமீமா பேகத்தின் குழந்தை pneumonia (நிமோனியா) என்ற நோய்த்தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

 

பிரித்தானிய பெண்ணான சமீமா பேகம் 2015 ஆம் ஆண்டில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அமைப்பில் இணைந்து கொள்வதற்காக தனது இரண்டு நண்பர்களுடன் சிரியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

 

அவர் மீண்டும் பிரித்தானியாவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த போதிலும், அவரின் குடியுரிமை நீக்கப்பட்டதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

 

அத்துடன், சமீமா பேகம்  சிரியாவில் ஐ.எஸ் கிளர்ச்சியாளர் அமைப்பைச் சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்து கொண்டிருந்தார்.

 

இதேவேளை, அவரின் கணவர் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 LEAVE A COMMENT