பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் 8  பேர் உயிரப்பு

பிரேசில் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரப்பு

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின்  சுஸானோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்குள் உள்நுழைந்த இரண்டு இளைஞர்களினால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, ஆறு பாடசாலை மாணவர்களும், பாசாலையில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்திய  இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதி ஆளுனர் João Doria தெரிவித்துள்ளார். 20 மற்றும் 25 வயதுகளையுடைய, பாடசாலையின் பழைய மாணவர்கள் இருவரினாலேயே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இதன்போது மாணவர்கள் உட்பட சுமார் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்ள் தெரிவிக்கின்றன.  இதேவேளை, 2011 ஆம் ஆண்டில் பிரேசிலில் பாடசாலையொன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது


 


LEAVE A COMMENT