முச்சக்கர வண்டிகளுக்கான வரியறவீடுகள் அதிகரிப்பு தொடர்பாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கான வரியறவீடுகள் அதிகரிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியொன்றின் விலை தற்போது, எட்டு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் நான்கு லட்சத்து 80ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிடுவதாகவும் இலங்கை சுயதொழில் பணியாளர்களின் முச்சக்கர வண்டி  சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சலுகைகளைப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபாலபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்ட போதிலும், இந்த முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 60 ஆயிரம் ரூபா வரி புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன குற்றஞ் சாட்டியுள்ளார்.

ஏழைகளின் போக்குவரத்து சேவையாகவே முச்சக்கர வண்டி காணப்படுவதாகவும், எனினும் இந்த விடயத்தில் உரிய தரப்பினர் கரிசனையற்ற விதத்தில் செயற்படுவதாகவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


LEAVE A COMMENT