பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு.

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு.

பொலன்னறுவை  - வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

பொருவெவ பகுதியில் தெலும்வெ என்ற இடத்திலிருந்து செவனப்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிலொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

19 மற்றும் 27 வயதுகளையுடைய கல்கமுவ, மற்றும் செவனப்பிட்டிய பகுதிகளச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது


LEAVE A COMMENT