கஞ்சாப் போதைப் பொருளுடன் இரண்டு  சந்தேகநபர்கள் கைது.

கஞ்சாப் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது.

கொழும்பு  - கருவாத்தோட்டம் பகுதியில் கேர்ள கஞ்சாவுடன்  இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் சுமார் 12 கிலோகிராம் கேர்ள கஞ்சாவுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கருவாத்தோட்டம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமையவே,சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, 28 மற்றும் 29 வயதுகைளையுடைய வவுனியா பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, கருவாத்தோட்டம் காவல்துறையினர் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


LEAVE A COMMENT