உலகை உலுக்கிய நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் துப்பாக்கி சூட்டு சம்பவம்

உலகை உலுக்கிய நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் துப்பாக்கி சூட்டு சம்பவம்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் இருவேறு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பியோகங்களில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 20 பேர் வரை காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்ட்ச்சர்ச்சிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் வௌ்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உட்பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர் அங்கு தொழுகைக்காக சென்றிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியுள்ளார்  

இதேவேளை, SOUTH ISLAND நகரிலுள்ள மற்றுமொரு பள்ளிவாசலிலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

கிறிஸ்ட்ச்சர்ச் பள்ளிவாசலுக்குள் தொழுகைக்காக சென்றிருந்தவர்கள் மீது கறுப்புநிற ஆடை மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த சந்தேகநபர் ஒருவர் தன்னியக்க துப்பாக்கியினால் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களை அடுத்து, மத்திய கிறிஸ்ட்ச்சர்ச்சில் உள்ள மக்களை தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் அண்மித்திருந்த போதிலும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களை அடுத்து, கிறிஸ்ட்சர்ச் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது   


LEAVE A COMMENT