Skip to content Skip to sidebar Skip to footer

Business News

மகாராஷ்டிராவில் கனரக வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 14 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலமொன்றின் கட்டுமானப் பணிகளில் போது கனரக வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தானே மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தூண்களுக்கு இடையில் கொன்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

Read more

கோழி இறைச்சி விலை குறைப்பு..!

கோழி இறைச்சியின்  விலையை  100 ரூபாவினால் குறைப்பதற்கு  உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள்  சங்கம் இணக்கம்  தெரிவித்துள்ளது கமத்தொழில் அமைச்சு அறிக்கையினூடாக இந்த  விடயத்தை தெரிவித்துள்ளது இதேவேளை கோழி  இறக்குமதிக்கு அரசாங்கம் நேற்று முதல் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாடு திகதி அறிவிப்பு..!

ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு  அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது அடுத்த மாதம்   10  ஆம் திகதி மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக  குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி மாநாட்டிற்கு முன்னர் 80 தேர்தல்  தொகுதி கிளைகளை மறுசீரமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக குழுவிற்கு அறிவித்துள்ளார். 135 தேர்தல்…

Read more

கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையில்   சந்திப்பு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கிடையில்   இன்று முற்பகல் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பின் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில்  கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும்   கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம் ஏ சுமந்திரன்  செல்வம் அடைக்கலநாதன்   கோவிந்தன் கருணாகரன்  சார்ள்ஸ் நிர்மலநாதன்   . எஸ்  ஶ்ரீதரன்   கலையரசன்  ஆகியோர் இந்த சந்திப்பில் கல்நது கொண்டுள்ளனர்

Read more

Sinopec இன் எரிபொருள் தொகுதியை  தரையிறக்கும் பணி ஆரம்பம்..!

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் தொகுதியை  தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் இதேவேளை சினோபெக் நிறுவனத்தின்  2 ஆவது எரிபொருள் இருப்பு நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர்  மேலும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச எரிபொருள்  விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நிறுவனம்  நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் விநியோக நடவடிக்கைகளை  ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Read more

எரிபொருள்  விலை அதிகரிப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள்  விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது  இதன்படி பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது ஒக்டேய்ன்  92 ரக பெட்ரோல் லீற்றரொன்றின் விலை  20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு  348 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது  அத்துடன்   ஒக்டேய்ன்    95  ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை  10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு  375 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது

Read more

கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!

கொழும்பில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமமைந்துள்ளனர். இந்த சம்பவம் வாழைத்தோட்டம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.     கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.      இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்து 228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.              மேல் மாகாணத்தில் மாத்திரம் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 27 ஆயிரத்து 883   டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில்…

Read more

அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்..!

அடுத்த மாதம் 3ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.   குறித்த சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்     இதன்போது , சுகாதார ஊழியர்கள்  மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து…

Read more

மசகு  எண்ணெய் விலை அதிகரிப்பு..!

உலக சந்தையில் மசகு  எண்ணெய்யின் விலை  மேலும்  அதிகரித்துள்ளது.                BRAND ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 99 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  அத்துடன் W.T.I ரக மசகு எண்ணெய்  பீப்பாய் ஒன்றின் விலை 80.58 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும்,  2 தசம் 68 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது..    எண்ணெய் உற்பத்தி செய்யும் பிரதான நாடுகள் எண்ணெய் உற்பத்தியினை குறைத்துள்ளமையே…

Read more